தமிழ் கைத்தடி யின் அர்த்தம்

கைத்தடி

பெயர்ச்சொல்

  • 1

    (வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர்) நடக்கும்போது ஊன்றிக்கொள்ளப் பயன்படும் மரக் கம்பு அல்லது கழி; ஊன்றுகோல்.

  • 2

    (ஒருவரின்) கையாள்.

    ‘இவன் அரசியல் தலைவர் ஒருவரின் கைத்தடி’
    ‘அந்தத் தொழிலதிபர் தன் கைத்தடிகளை விட்டு என்னை மிரட்டப்பார்க்கிறார்’