தமிழ் கைதுசெய் யின் அர்த்தம்

கைதுசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (குற்றவியல் சட்டப்படி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபரைக் காவல்துறையினர் பிடித்து, அவர்) தன்னிச்சைப்படி செயல்படவிடாமல் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல்.

    ‘கொலையோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களைக் காவல்துறை கைதுசெய்தது’
    ‘கருப்புக்கொடி காட்ட முயன்ற கட்சித் தொண்டர்கள்கைதுசெய்யப்பட்டனர்’
    ‘குண்டர் சட்டத்தின் கீழ் பிரபல ரௌடி கைதுசெய்யப்பட்டான்’