தமிழ் கைதூக்கிவிடு யின் அர்த்தம்

கைதூக்கிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (பொருளாதார ரீதியாக) நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்; உயர்த்துதல்.

    ‘வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் கலைஞர்களை அரசுதான் கைதூக்கிவிட வேண்டும்’
    ‘தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியைத் தழுவிய பின் இந்தப் படம்தான் அவரைக் கைதூக்கிவிட்டது’