தமிழ் கைதொட்டு யின் அர்த்தம்

கைதொட்டு

வினையடை

  • 1

    (ஒருவரை அடிப்பது குறித்து வரும்போது) உடலில் கை படும்படி.

    ‘நானே என் பிள்ளையை இதுவரை கைதொட்டு அடித்ததில்லை. அவன் யார் என் பிள்ளை மீது கைவைக்க?’
    ‘வளர்ந்த பிள்ளையைக் கைதொட்டு அடிக்கலாமா?’