தமிழ் கைநீட்டு யின் அர்த்தம்

கைநீட்டு

வினைச்சொல்-நீட்ட, -நீட்டி

 • 1

  (பண) உதவி செய்யும்படி கேட்டல்.

  ‘யாரிடமும் போய்க் கைநீட்டுவதில்லை என்பது நல்ல கொள்கைதான்’

 • 2

  (சுயக் கட்டுப்பாடு இல்லாமல்) கையால் (ஒருவரை) அடித்தல்.

  ‘மாமாவுக்குக் கோபம் வந்தால் கைநீட்டிவிடுவார்’
  ‘இந்தக் கைநீட்டுகிற பழக்கத்தை விட்டுவிடுங்கள்!’