தமிழ் கைநனை யின் அர்த்தம்

கைநனை

வினைச்சொல்-நனைக்க, -நனைத்து

  • 1

    (ஒருவர் வீட்டில் உறவை நிலைநாட்டும் அல்லது உறுதிப்படுத்தும் முறையில்) உணவு உண்ணுதல்.

    ‘சம்பந்தம் பேசி முடித்த பின்னரே கைநனைப்போம்’

  • 2

    (எதிர்மறையில்) (பிறர் வீட்டில்) உணவு உண்ணுதல்.

    ‘அப்பா யார் வீட்டிலும் கைநனைக்க மாட்டார்’