தமிழ் கைப்பற்று யின் அர்த்தம்

கைப்பற்று

வினைச்சொல்கைப்பற்ற, கைப்பற்றி

 • 1

  (சட்ட நடவடிக்கைகள் அல்லது பிற நடவடிக்கைகளின் மூலமாக ஒன்றை) தன்வசம் எடுத்துக்கொள்ளுதல்.

  ‘கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகளைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினார்கள்’
  ‘தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிணத்தைக் காவலர்கள் கைப்பற்றினார்கள்’

 • 2

  (போர், ஆக்கிரமிப்பு, வன்முறை போன்றவற்றின் மூலம் ஒரு இடம், நாடு, நகரம் போன்றவற்றை) தன்வசமாக்கிக்கொள்ளுதல் அல்லது தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டுவருதல்.

  ‘போரில் கைப்பற்றிய இடங்கள் போர்நிறுத்த ஒப்பந்தப்படி திருப்பித் தரப்பட்டன’
  ‘காஷ்மீரில் உள்ள ஒரு உணவு விடுதியைத் தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள்’
  ‘உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றிய சம்பவங்கள் நடந்தன’

 • 3

  (தேர்தல், விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் தொகுதிகள், கோப்பைகள் போன்றவற்றை) வெல்லுதல்.

  ‘எங்கள் கட்சி ஐம்பது இடங்களையாவது கைப்பற்றும்’
  ‘3-2 என்ற கணக்கில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது’

 • 4

  (அதிகாரம், பதவி முதலியவற்றை) முயன்று அடைதல்; எடுத்துக்கொள்ளுதல்.

  ‘தலைமைப் பதவியைக் கைப்பற்றக் கட்சித் தலைவர்களிடையே பலத்த போட்டி’

தமிழ் கைப்பற்று யின் அர்த்தம்

கைப்பற்று

பெயர்ச்சொல்

 • 1

  (சட்டப்படி) ஒருவரின் பெயரில் உள்ள (நிலம், வீடு போன்ற) சொத்து.

  ‘கைப்பற்று நிலத்தின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன’
  ‘கைப்பற்றிலுள்ள பலன்கள் வாரிசுதாரராகிய மகனையே சேரும் என்று உயிலில் உள்ளது’