தமிழ் கைப்பிடி யின் அர்த்தம்

கைப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு திருமணம் செய்துகொள்ளுதல்.

  ‘வீட்டின் எதிர்ப்பையெல்லாம் மீறிக் கதாநாயகி தன் காதலனையே கைப்பிடிக்கிறாள்’

தமிழ் கைப்பிடி யின் அர்த்தம்

கைப்பிடி

பெயர்ச்சொல்

 • 1

  (மண்வெட்டி போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும்) பிடித்துக்கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம்.

 • 2

  (படிக்கட்டின் ஓரத்தில்) பிடித்துக்கொள்ள உதவும் வகையில் உள்ள அமைப்பு.

தமிழ் கைப்பிடி யின் அர்த்தம்

கைப்பிடி

பெயர்ச்சொல்

 • 1

  (தானியம், மணல் போன்றவை குறித்து வரும்போது) கையால் அள்ளும் அல்லது கைக்குள் கொள்ளும் அளவு.

  ‘கைப்பிடி அளவு உப்பை அள்ளி மாவில் அம்மா போட்டாள்’
  ‘பல்லாங்குழி விளையாடுவதற்காகக் கைப்பிடி புளியங்கொட்டைகளை அவள் அள்ளிக்கொண்டாள்’