தமிழ் கைப்பெட்டி யின் அர்த்தம்

கைப்பெட்டி

பெயர்ச்சொல்

 • 1

  பணம், துணி போன்றவை வைத்துக்கொள்ளப் பயன்படும் (தகரம், தோல் முதலியவற்றால் செய்யப்பட்ட) சிறு பெட்டி.

  ‘அவசரத்துக்கு உதவும் என்று கொஞ்சம் பணத்தைக் கைப்பெட்டியில் வைப்பது அவரது வழக்கம்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு பனை ஓலையில் பின்னப்பட்ட கையடக்கமான சிறிய பெட்டி.

  ‘கைப்பெட்டியை எடுத்துப் போய் அப்பம் வாங்கிக்கொண்டு வா’
  ‘வெங்காயம் உரித்துக் கைப்பெட்டியில் போடு’