கைமாறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கைமாறு1கைமாறு2

கைமாறு1

வினைச்சொல்-மாற, -மாறி

 • 1

  (உரிமை, தொகை முதலியவை) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செல்லுதல்.

  ‘மாமாவின் ஜவுளிக் கடை கைமாறிவிட்டது’
  ‘பணம் கைமாறியதும் வீட்டின் மூலப்பத்திரம் கிடைத்தது’

கைமாறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கைமாறு1கைமாறு2

கைமாறு2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (செய்த உதவிக்கு) நன்றி தெரிவிக்கும் வகையில் செய்வது; பிரதியுபகாரம்.

  ‘கைமாறு கருதாமல் உதவி புரிபவர்களும் இருக்கிறார்கள்’