தமிழ் கையமர்த்து யின் அர்த்தம்

கையமர்த்து

வினைச்சொல்-அமர்த்த, -அமர்த்தி

  • 1

    (அமைதியாக இருக்கும்படியோ ஒன்றைச் செய்ய வேண்டாம் என்றோ) கையால் சைகை காட்டுதல்.

    ‘ஏதோ கோபமாகப் பேச ஆரம்பித்தவனை ‘இரு’ என்று கையமர்த்தினார்’
    ‘‘எல்லோரும் தயவுசெய்து சற்று அமைதியாக இருங்கள்’ என்று கையமர்த்திக் கூறினார்’