தமிழ் கையாடு யின் அர்த்தம்

கையாடு

வினைச்சொல்கையாட, கையாடி

  • 1

    (பொதுப் பணத்தை அல்லது மற்றொருவரின் பணத்தைச் சொந்த உபயோகத்திற்கு) நம்பிக்கைக்கு மாறாக எடுத்துக்கொள்ளுதல்.

    ‘அலுவலகத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்’
    ‘கோயில் பணத்தைக் கையாடிவிட்டு இப்போது நியாயம் வேறு பேசுகிறாயா?’