தமிழ் கையாள் யின் அர்த்தம்

கையாள்

வினைச்சொல்கையாள, கையாண்டு

 • 1

  (ஒன்றை உரிய முறையில்) பயன்படுத்துதல்; உபயோகப்படுத்துதல்.

  ‘கண்ணாடிச் சாமான்களைக் கவனமாகக் கையாள வேண்டும்’
  ‘நவீன வேளாண்மை முறையைக் கையாண்டு அதிக மகசூல் பெறலாம்’
  ‘யானைக்கால் வியாதியைக் குணப்படுத்த மருத்துவர்கள் புதிய சிகிச்சை முறைகளைக் கையாண்டுவருகிறார்கள்’
  ‘கணிப்பொறியைக் கையாள எனக்குத் தெரியாது’

 • 2

  (குறிப்பிட்ட செயல், பணி போன்றவற்றை) மேற்கொள்ளுதல்.

  ‘சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் கடந்த மாதம் மட்டும் 40 இலட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது’
  ‘இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்று எனக்குத் தெரியும்’

தமிழ் கையாள் யின் அர்த்தம்

கையாள்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரின்) தவறான செயல்களுக்கு ரகசியமாகத் துணைபுரியும் ஆள்.

  ‘அவனைப் பார்த்தால் முதலாளியின் கையாள்போலத் தெரிகிறது’