தமிழ் கையில் எடுத்துக்கொள் யின் அர்த்தம்

கையில் எடுத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (சட்டம், அதிகாரம் முதலியவற்றை) வலிந்து மேற்கொள்ளுதல்.

    ‘மாமியார் படுக்கையில் விழுந்ததும் மருமகள் வீட்டு நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள்’
    ‘இயக்குநர் வெளிநாடு சென்றுள்ளதால் மேலாளர் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம்போடுகிறார்’