தமிழ் கையில் பிடித்துக்கொடு யின் அர்த்தம்

கையில் பிடித்துக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  (பெண்ணை) ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்தல்.

  ‘தங்கையை யாராவது ஒருவன் கையில் பிடித்துக்கொடுத்த பிறகுதான் என் திருமணத்தைப் பற்றி நான் யோசிக்க முடியும்’

 • 2

  (ஒரு நபரை ஒருவரின்) முழுப் பொறுப்பில் விடுதல்; (ஒருவரிடம்) ஒப்படைத்தல்.

  ‘அம்மா இறந்ததும் எங்களை மாமா கையில் பிடித்துக்கொடுத்துவிட்டு அப்பா காசிக்குப் போய்விட்டார்’
  ‘எனக்கு ஐந்து வயதிருக்கும்போது என்னைப் பாட்டி கையில் பிடித்துக்கொடுத்துவிட்டு அம்மா கண்மூடிவிட்டாள்’