தமிழ் கையுமாக யின் அர்த்தம்

கையுமாக

வினையடை

  • 1

    ‘குறிப்பிடப்படும் ஒன்றை விடாமல் அல்லது குறிப்பிடப்படும் ஒன்றிலிருந்து விடுபடாமல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘கல்லூரி நாட்களில் எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பான்’
    ‘பள்ளிக்கூடம் விட்டதும் இந்தப் பொடியன்கள் பட்டமும் கையுமாகத் திரிகிறார்கள்’
    ‘அவன் வந்தபோது வேலையும் கையுமாக இருந்தேன்’