தமிழ் கையெழுத்து இயக்கம் யின் அர்த்தம்

கையெழுத்து இயக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட பொதுநலன், கோரிக்கை போன்றவற்றின்மீது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக) மிகப் பெரிய எண்ணிக்கையில் ஆதரவாளர்களின் கையெழுத்தைப் பெறும் நடவடிக்கை.

    ‘தங்கள் ஊருக்கு ரயில்பாதை அமைக்க அந்தப் பகுதி மக்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்’
    ‘அணுமின் நிலையத்தை எதிர்த்துக் கையெழுத்து இயக்கம்’