தமிழ் கையோடு யின் அர்த்தம்

கையோடு

வினையடை

 • 1

  (முடித்த வேலையை) தொடர்ந்து; (முடிய இருக்கும் வேலையோடு) கூட.

  ‘கல்யாணம் முடித்த கையோடு திருப்பதிக்குப் போய்விட்டு வந்தார்கள்’
  ‘நீ வெளியே போனால் கையோடு இந்தக் கடிதத்தைத் தபாலில் போட்டுவிடு!’

 • 2

  (அழைத்துச்செல்பவருடன்) உடன் செல்லும் வகையில்; கூடவே.

  ‘உங்களைக் கையோடு கூட்டிவரச் சொன்னார் முதலாளி’

 • 3

  தன்னோடு.

  ‘கையோடு எடுத்துவந்திருந்த பொட்டலத்தைப் பிரித்தார்’