தமிழ் கையைக் கட்டு யின் அர்த்தம்

கையைக் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (ஒன்றைச் செய்யவிடாமல் ஒருவரை) கட்டுப்படுத்துதல்.

    ‘குடும்பக் கஷ்டம் ஒருபுறம் இருந்தாலும் நேர்மை அவர் கையைக் கட்டிவிட்டது’
    ‘நானே இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணலாம் என்றுதான் கிளம்பினேன். அம்மாதான் ஊர்வம்பு உனக்கு எதற்கு என்று சொல்லி என் கையைக் கட்டிவிட்டாள்’