தமிழ் கையைக் கடி யின் அர்த்தம்

கையைக் கடி

வினைச்சொல்கடிக்க, கடித்து

 • 1

  (எதிர்பார்த்ததற்கும் மேலாகச் செலவாகி) பாதிப்பை ஏற்படுத்துதல்.

  ‘மகளின் கல்யாணச் செலவு கையைக் கடித்துவிட்டது’

 • 2

  நஷ்டம் ஏற்படுத்துதல்.

  ‘இந்த முறை வியாபாரம் கையைக் கடித்துவிட்டது’
  ‘இந்தத் திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளரின் கையைக் கடிக்கவில்லை’