தமிழ் கையைச் சுட்டுக்கொள் யின் அர்த்தம்

கையைச் சுட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒரு செயலில் ஈடுபட்டு) கசப்பான அனுபவத்தைப் பெறுதல்; நஷ்டம் அடைதல்.

    ‘அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்து ஏற்கனவே ஒரு முறை கையைச் சுட்டுக்கொண்டது போதும்’
    ‘மீண்டும் அந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு கையைச் சுட்டுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை’