தமிழ் கையைப் பிசை யின் அர்த்தம்

கையைப் பிசை

வினைச்சொல்பிசைய, பிசைந்து

  • 1

    (இக்கட்டான சூழலில்) செய்வதறியாது கலங்குதல் அல்லது திகைத்தல்.

    ‘அவசரமாக வீடு கட்டத் தொடங்கிவிட்டுப் பிறகு கையைப் பிசைவதில் அர்த்தம் இல்லை’
    ‘மகள் திருமணத்திற்குப் பணம் கிடைக்காமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தார்’
    ‘தங்கச் சங்கிலி தொலைந்துவிட்டது. கணவன் கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தாள்’