தமிழ் கைரேகை யின் அர்த்தம்

கைரேகை

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) உள்ளங்கையில், விரலில் அமைந்திருக்கும் ரேகை.

  ‘குற்றவாளிகளின் கைரேகைகளை ஒப்புநோக்குவதன் மூலம் காவல்துறையினர் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கின்றனர்’
  ‘திருடுபோன கடைகளிலிருந்து எடுக்கப்பட்ட திருடர்களின் கைரேகைகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன’

 • 2

  (ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டும் விதமாகப் பதிக்கும்) இடதுகை கட்டைவிரல் ரேகை.

  ‘பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கைரேகையும் பதிக்க வேண்டும்’
  ‘அமெரிக்காவுக்கு வரும் பயணிகளின் பயண ஆவணங்களில் கைரேகையைப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’

 • 3

  கைரேகை ஜோஸ்யம்.

  ‘உனக்குக் கைரேகையில் நம்பிக்கை உண்டா?’