தமிழ் கைவா யின் அர்த்தம்

கைவா

வினைச்சொல்-வர, -வந்து

 • 1

  (ஒன்றை) திறமையாகச் செய்ய முடிதல்.

  ‘ஏமாற்றுவது சிலருக்குக் கைவந்த விஷயம்’
  ‘கவிதை எழுதுவது மட்டும் எனக்கு இன்னும் கைவரவில்லை’

 • 2

  (ஒன்றைச் செய்ய வேண்டும் என்று) இயல்பாகத் தோன்றுதல்.

  ‘எதையும் கொடுக்க அவருக்குக் கைவராது’
  ‘குழந்தையை அடிக்க உனக்கு எப்படிக் கைவந்தது?’