தமிழ் கைவிடு யின் அர்த்தம்

கைவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  (குறிப்பிட்ட முடிவு, திட்டம், எண்ணம் முதலியவற்றை) மேற்கொண்டு தொடராமல் இருத்தல்; (நடத்துவதாக இருந்த நிகழ்ச்சியை நடத்தாமல்) விட்டுவிடுதல்; (போராட்டம், பழக்கம், தொழில் முதலியவற்றை) மேலும் தொடராமல் நிறுத்துதல்.

  ‘குழந்தைக்கு உடல்நலம் இல்லாததால் ஊருக்குப் போகும் யோசனையைக் கைவிட்டேன்’
  ‘போராட்டத்தைத் தொழிலாளர்கள் கைவிட்டால்தான் பேச்சு வார்த்தையைத் தொடங்க முடியும் என்று நிர்வாகம் அறிவித்தது’
  ‘தண்ணீர்த் தட்டுப்பாட்டால் குறுவைச் சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலை’
  ‘மழையின் காரணமாகப் போட்டி கைவிடப்பட்டது’

 • 2

  (ஒன்றைச் செய்யாமல் அல்லது நிறைவேற்றாமல் ஒருவரை) ஏமாற்றுதல்; ஏமாற்றம் அடையச் செய்தல்.

  ‘வேலைக்கு உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்’
  ‘இந்த முறையும் மழை நம்மைக் கைவிட்டுவிடுமோ?’