தமிழ் கைவிரி யின் அர்த்தம்

கைவிரி

வினைச்சொல்-விரிக்க, -விரித்து

  • 1

    (ஓர் உதவிக்காக ஒருவரை மிகவும் நம்பிக்கையுடன் நாடும்போது அவர்) இயலாது என்று தெரிவித்தல்.

    ‘திருமணத்துக்கான உதவிகளைச் செய்வதாகச் சொல்லிவிட்டுக் கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டார்’
    ‘உன்னை நம்பித்தான் கடையை ஆரம்பித்தேன். இப்போது கைவிரித்தால் நான் என்ன செய்வேன்?’