கைவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கைவை1கைவை2

கைவை1

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (ஒருவரை) அடித்தல்.

  ‘அவன் முரடன்; அவன் மேல் கைவைக்க யாருக்கும் துணிச்சல் இல்லை’

 • 2

  திருடுதல்.

  ‘அரசாங்கப் பணத்தில் கைவைத்து மாட்டிக்கொண்டான்’

 • 3

  (ஒருவருடைய பிழைப்பை) கெடுத்தல்.

  ‘என் பிழைப்பிலேயே கைவைக்க ஆரம்பித்துவிட்டாயா?’
  உரு வழக்கு ‘என் சுதந்திரத்தில் கைவைக்க உனக்கு உரிமை இல்லை’

 • 4

  (ஒருவர் எழுதிய கட்டுரை, கதை போன்றவற்றில் அவருடைய அனுமதி இன்றி) திருத்தங்கள் செய்தல்.

  ‘என்னைக் கேட்காமல் என் கட்டுரையில் அவர் கைவைத்திருக்கக் கூடாது’

கைவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கைவை1கைவை2

கைவை2

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (ஒருவர் ஒரு செயல், காரியம், பணி போன்றவற்றை) மேற்கொள்ளுதல்.

  ‘அவர் கைவைத்து ஆரம்பித்த வியாபாரம் எதுவுமே சோடைபோனதில்லை’
  ‘நீ கைவைத்தால் எந்த வேலையும் உருப்படாது’

 • 2

  பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளுதல்.

  ‘இப்போது வீட்டில் கைவைத்தால் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும்’
  ‘இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த வண்டியில் நீங்கள் கைவைக்க வேண்டியதில்லை’