தமிழ் கை இறங்கு யின் அர்த்தம்

கை இறங்கு

வினைச்சொல்இறங்க, இறங்கி

 • 1

  (ஒருவருடைய) செல்வாக்கு குறைதல்.

  ‘அவர் பெரிய கோடீஸ்வரர்; வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் என்பதால் கொஞ்சம் கை இறங்கியிருக்கிறது’
  ‘கையில் காசு இருந்தபோது அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்; இப்போது கை இறங்கிவிட்டதால் ஒருவர்கூடப் பக்கத்தில் வருவதில்லை’

 • 2

  பேச்சு வழக்கு (சீட்டு விளையாட்டில்) (ஒருவரின்) முறை.

  ‘அடுத்து உன் கை இறங்க வேண்டும்’