கொடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடி1கொடி2கொடி3

கொடி1

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றின் மேல் பற்றி ஏறும் அல்லது தரையில் படரும், வளையும் தன்மை கொண்ட தண்டினை உடைய தாவரம்.

  ‘அவரைக் கொடி’
  ‘வெற்றிலைக் கொடி’
  ‘திராட்சைக் கொடி’
  ‘பூசணிக் கொடி’
  ‘பரங்கிக் கொடி’

 • 2

  (துவைத்த துணிகளை உலர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும்) இரு முனைகளையும் இழுத்துக் கட்டிய கயிறு அல்லது கம்பி.

  ‘துவைத்த துணிகளைக் கொடியில் காயப்போட்டாள்’
  ‘நைலான் கயிற்றைக் கொடியாகக் கட்டியிருந்தார்கள்’

 • 3

  தொப்புள்கொடி.

  ‘குழந்தையின் கழுத்தில் கொடி சுற்றிக்கொண்டதால் பிரசவம் சிக்கலாகிவிட்டது’

 • 4

  (பிற சொற்களோடு இணைந்து வரும்போது) நகையாக அணியும் சரடு.

  ‘தாலிக் கொடி’
  ‘அரைஞாண் கொடி’

கொடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடி1கொடி2கொடி3

கொடி2

பெயர்ச்சொல்

 • 1

  (நாடு, கட்சி, இயக்கம் போன்றவற்றின்) சின்னம் பதித்துக் கம்பத்தில் பறக்க வசதியாக வடிவமைத்துத் தைக்கப்பட்ட துணி; மேற்குறிப்பிட்டபடி சின்னம் அச்சிட்டு சட்டை முதலியவற்றில் குத்திக்கொள்ள வசதியாக வெட்டப்பட்ட சிறு துண்டுத்தாள்.

  ‘இந்திய தேசியக் கொடி செங்கோட்டையின் உச்சியில் பட்டொளி வீசிப் பறந்தது’
  ‘மாநாட்டுக்கு அணிவகுத்துச் சென்ற வாகனங்களின் முன்புறம் கட்சிக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன’
  ‘சுதந்திர தின விழாவுக்கு வந்திருந்த மாணவர்களின் சட்டைகளில் இந்தியக் கொடி’
  ‘சாரணர் இயக்கத்தின் கொடியைத் தலைமை ஆசிரியர் ஏற்றிவைத்துப் பேசினார்’

 • 2

  நிறங்களின் வழியாக ஒன்றைக் குறியீடாக உணர்த்துவதற்கு அளவாக வெட்டிய துணி.

  ‘பச்சைக் கொடி’
  ‘வெள்ளைக் கொடி’
  ‘இரும்புக் கம்பிகள் ஏற்றியிருந்த லாரியின் பின்புறம் ஒரு சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது’

கொடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடி1கொடி2கொடி3

கொடி3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு காற்றாடி; பட்டம்.

  ‘பள்ளிக்கூடம் விட்டதும் எல்லாப் பிள்ளைகளுமே கொடியும் கையுமாய்த்தான் திரிகிறார்கள்’
  ‘உன்னுடைய கொடியைவிட என் கொடி வடிவாக இருக்கிறது’