தமிழ் கொடிமரம் யின் அர்த்தம்

கொடிமரம்

பெயர்ச்சொல்

 • 1

  தேசியக் கொடி, கட்சிக் கொடி போன்றவற்றை ஏற்றுவதற்காக உள்ள கம்பம்.

  ‘கோட்டையில் உள்ள கொடி மரம் புதுப்பிக்கப்பட்டது’
  ‘பள்ளி மைதானத்தின் நடுவில் கொடிமரம் இருந்தது’
  ‘கொடிமரத்தில் வேற்று நாட்டுக் கொடியோடு ஒரு கப்பல் நின்றிருந்தது’

 • 2

  திருவிழாவின் துவக்கமாகக் கொடியேற்றுவதற்கு சன்னதிக்கு முன்பாகக் கோயிலுக்குள் ஒரு மேடையில் தகடு வேயப்பட்டு நிரந்தரமாக நடப்பட்டிருக்கும் உயரமான மரம்.

 • 3

  (சில தேவாலயங்களிலும் மசூதிகளிலும்) திருவிழாவின் துவக்கத்தை அறிவிக்க நடக்கும் கொடியேற்றத்துக்காக நடப்பட்டிருக்கும் உயரமான கம்பம்.