தமிழ் கோணல் யின் அர்த்தம்

கோணல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நேர்கோடாக அல்லது ஒழுங்காக அமையாதது; வளைந்த நிலை.

  ‘உன் கையெழுத்து ஒரே கோணலாக இருக்கிறது’
  ‘எலும்பு முறிவுக்குப் பிறகு கை சற்றுக் கோணலாகத் தெரிகிறது’
  ‘கோணல் தென்னை’

 • 2

  (எண்ணத்தின், சிந்தனையின்) முறையற்ற போக்கு; வக்கிரம்.

  ‘உனக்கு ஏன் புத்தி இப்படிக் கோணலாகப் போகிறது?’