கோது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோது1கோது2

கோது1

வினைச்சொல்கோத, கோதி

 • 1

  (பறவைகள் சிறகுகளின் ஊடே அலகை நுழைத்து) நீவுதல்; குடைதல்; (முடியின் இடையே விரல், சீப்பு முதலியவற்றைக் கொடுத்து) நீளவாக்கில் மெதுவாக இழுத்தல்.

  ‘புறாக்கள் கழுத்தை நொடித்துச் சிறகைக் கோதிக்கொண்டிருந்தன’
  ‘குளித்துவிட்டு வந்து ஈரம் போக முடியைக் கோதிக்கொண்டிருந்தாள்’

 • 2

  (தலையை) அன்புடன் தடவுதல்; வருடுதல்.

  ‘குழந்தையின் தலையைக் கோதிவிட்டுக் கனிவு பொங்கப் பார்த்தாள்’

கோது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோது1கோது2

கோது2

பெயர்ச்சொல்

 • 1

  வட்டார வழக்கு (பலாப்பழத்தின் தோலை உரிக்கும்போது சுளையின் மேல்) நார்போல் படிந்து காணப்படும் பகுதி.

  ‘கோதுடன் சுளையைச் சாப்பிட்டால் வயிறு வலிக்கும்’

 • 2

  வட்டார வழக்கு கரும்பைப் பிழிந்தபின் கிடைக்கும் சக்கை.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (நிலக்கடலை, உளுந்து போன்றவற்றின்) மேல் ஓடு/(மங்குஸ்தான் பழம், ரம்புட்டான் பழம் போன்றவற்றின்) மேல் தோல்.

  ‘வயிற்றுவலிக்கு மங்குஸ்தான் கோதை அவித்துக் குடித்தால் நல்லது’