தமிழ் கோலம் யின் அர்த்தம்

கோலம்

பெயர்ச்சொல்

 • 1

  (பொடியாலோ மாவாலோ மாவுக் கரைசலாலோ) தரையில் புள்ளிகள் வைத்து, கோடுகள் இழுத்து, அவற்றை இணைத்து உருவாக்கும் அலங்கார வடிவம்.

  ‘பொங்கல் என்பதால் பெரியபெரிய கோலங்களைப் போட்டிருந்தார்கள்’
  ‘அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கோலம் போடுவதற்கு இடம் ஏது?’
  ‘அம்மாவுக்கு நூறு விதமாகக் கோலங்கள் போடத் தெரியும்’

 • 2

  (குறிப்பிட்ட சூழல், தன்மை, நிலை போன்றவை வெளிப்படும் வகையிலான) தோற்றம்.

  ‘வயோதிகக் கோலம்’
  ‘விதவைக் கோலம்’
  ‘வீடு கல்யாணக் கோலம் பூண்டிருந்தது’