தமிழ் சக்கரம் யின் அர்த்தம்

சக்கரம்

பெயர்ச்சொல்

 • 1

  (வண்டி, சைக்கிள், பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர உதவும்) அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்.

  ‘வண்டியின் சக்கரத்தைக் கழற்றி உருட்டிக் கொண்டு சென்றான்’

 • 2

  (இயந்திர விசையினால் இயங்கும் இயந்திரங்கள் போன்றவற்றில்) சுழலும் வட்டமான பாகம்.

 • 3

  (குயவர்கள் மண்பாண்டம் செய்வதற்குப் பயன்படுத்தும்) கிடைமட்ட நிலையில் ஒரு அச்சில் சுழலும் வட்டமான சாதனம்.

 • 4

  (புராணத்தில்) திருமாலின் கையில் உள்ளதும் வீசினால் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்.