தமிழ் சக்கரவர்த்தி யின் அர்த்தம்

சக்கரவர்த்தி

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு பேரரசன்.

  ‘சக்கரவர்த்தி அக்பர் கட்டிய கோட்டை ஆக்ராவில் உள்ளது’

 • 2

  குறிப்பிட்ட கலைத் துறையில் பெரும் சிறப்பு பெற்று விளங்குபவருக்குத் தரப்படும் பட்டம்.

  ‘இராஜரத்தினம் பிள்ளை அவர்களுக்கு நாகசுரச் சக்கரவர்த்தி என்ற பெயர் உண்டு’
  ‘இசைச் சக்கரவர்த்தி’
  ‘கவிச் சக்கரவர்த்தி’