தமிழ் சக்கைப்போடு போடு யின் அர்த்தம்

சக்கைப்போடு போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவர் ஒன்றை) சிறப்பாகச் செய்தல்/(ஒன்று) வெற்றிகரமாக அல்லது அமோகமாக நிகழ்தல்.

  ‘இந்த இயக்குநரின் முதல் படமே வசூலில் சக்கைப்போடு போடுகிறது’
  ‘இந்திய அணிக்குப் புதிதாக வந்துள்ள வீரர்கள் சக்கைப்போடு போடுகிறார்கள்’
  ‘கோடைக் காலத்தில் குளிர்பானங்களின் விற்பனை சக்கைப்போடு போடுகிறது’

 • 2

  பேச்சு வழக்கு (ஒன்று) தீவிரத்துடன் நிகழ்தல்.

  ‘நேற்று இரவு மழை சக்கைப்போடு போட்டது’