தமிழ் சக்கையாகப் பிழி யின் அர்த்தம்

சக்கையாகப் பிழி

வினைச்சொல்

  • 1

    (பிழிய, பிழிந்து) களைத்துப்போகும் அளவுக்கு ஒருவரை வேலை செய்ய வைத்தல்.

    ‘கொடுக்கிற இரண்டாயிரம் ரூபாய்க்கு நம்மைச் சக்கையாகப் பிழிந்துவிடுகிறார்கள்’
    ‘ஆண்டுக் கணக்கை முடிக்க வேண்டும் என்பதால் அலுவலகத்தில் வேலை சக்கையாகப் பிழிந்தெடுக்கிறது’