தமிழ் சகதி யின் அர்த்தம்

சகதி

பெயர்ச்சொல்

 • 1

  சேறு.

  ‘மழை பெய்துவிட்டால் தெருவில் நடக்க முடியாது; அவ்வளவு சகதி’

தமிழ் சக்தி யின் அர்த்தம்

சக்தி

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு செயலைச் செய்யத் தேவைப்படும் ஆற்றல்; திறன்.

  ‘உயிரினங்களிலேயே மனிதனுக்கு மட்டும்தான் பேசும் சக்தி உண்டு’
  ‘ஆந்தைகளுக்கு இரவில் பார்க்கும் சக்தி உண்டு’
  ‘எழுந்திருக்கக்கூடச் சக்தி இல்லாமல் கிடக்கிறார் கிழவர்’

 • 2

  ஒரு செயலுக்கு அல்லது இயக்கத்துக்குத் தேவையான மின்சாரம், வெப்பம், விசை போன்றவற்றைக் குறிப்பது.

  ‘மின் சக்தி’
  ‘எரிசக்தி’

 • 3

  (ஒருவரால் ஒன்றைத் தன்னுடைய) தகுதிக்கு அல்லது நிலைக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய அளவு.

  ‘சக்திக்கு மீறிச் செலவு செய்துவிட்டு வருத்தப்படாதே!’
  ‘ஏழைக்குள்ள சக்தி இவ்வளவுதான்’

 • 4

  (ஆணின்) இனவிருத்தி செய்யும் ஆற்றல்; வீரியம்.

  ‘‘உங்கள் சக்தியை விருத்தி செய்துகொள்ள எங்கள் லேகியத்தைச் சாப்பிடுங்கள்’ என்று ஒரு விளம்பரம் வந்திருந்தது’

 • 5

  (ஏதேனும் ஒன்றுக்காக) பலமுடைய குழுவாகச் செயல்படுவது.

  ‘இந்தத் தேர்தல் ஜனநாயகச் சக்திகளுக்கும் பிற்போக்குச் சக்திகளுக்கும் இடையிலான போராட்டம்’
  ‘தேச விரோதச் சக்திகள் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க முயல்கின்றன’
  ‘தீய சக்திகள்’

 • 6

  (இந்து மதத்தில்) படைப்பாற்றலுக்கான பெண் தெய்வம்.

  ‘சக்தி வழிபாடு’

 • 7

  இயற்பியல்
  (ஒரு இயந்திரம், சாதனம் போன்றவை) அதிகபட்சமாக இயங்கக்கூடிய அளவு.

  ‘இந்த இயந்திரத்தின் சக்தி எவ்வளவு?’