தமிழ் சகா யின் அர்த்தம்

சகா

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் பன்மையில்) சக ஊழியர்; கூட்டாளி.

  ‘தொழிற்சங்கத் தலைவர் சகாக்களுடன் பேசிவிட்டுத் தன் முடிவைச் சொல்வதாகக் கூறினார்’

 • 2

  அருகிவரும் வழக்கு நண்பன்.

  ‘சகாக்களுடன் சுற்றிவிட்டு இரவு தாமதமாகத் திரும்பி வந்தான்’
  ‘உங்கள் பையன் தன் சகாவைத் தேடிப் போயிருக்கிறான்’