தமிழ் சகாப்தம் யின் அர்த்தம்

சகாப்தம்

பெயர்ச்சொல்

 • 1

  (வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும்) ஆண்டு முறை.

  ‘சாலி வாகன சகாப்தம்’
  ‘கிறிஸ்தவ சகாப்தம்’

 • 2

  சிறப்பு மிக்க காலகட்டம்.

  ‘காந்தி சகாப்தம் முடிவடைந்ததா?’
  ‘இரு நாடுகளின் நட்புறவில் இது ஒரு புதிய சகாப்தம்’