சகி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சகி1சகி2

சகி1

வினைச்சொல்சகிக்க, சகித்து

 • 1

  பொறுத்தல்; தாங்கிக்கொள்ளுதல்.

  ‘நெஞ்சில் சகிக்க முடியாத வலி’
  ‘இப்படி ஓர் அவமானத்தைச் சகித்துக்கொண்டு உன்னால் எப்படி இருக்க முடிகிறது?’
  ‘தாடியும் மீசையுமாக இருக்கிற உன் முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை’

சகி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சகி1சகி2

சகி2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு தோழி.

  ‘என் பிரிய சகி!’
  ‘பாலும் கசந்ததடி சகியே!’