தமிழ் சகுனம் யின் அர்த்தம்

சகுனம்

பெயர்ச்சொல்

  • 1

    மேற்கொள்ளும் செயல் நல்லபடியாக முடியும் அல்லது தடைபட்டுவிடும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும்படி நிகழ்வதாக நம்பப்படும் அறிகுறி.

    ‘வெளியே புறப்படும்போது தண்ணீர்க் குடத்தோடு பெண் எதிரே வந்தால் நல்ல சகுனம் என்பார்கள்’
    ‘பூனை குறுக்கே வந்துவிட்டது; புறப்படும்போதே சகுனம் சரியில்லை’
    ‘எல்லாவற்றுக்கும் சகுனம் பார்த்துக்கொண்டிருந்தால் என்ன ஆவது?’