தமிழ் சங்கடப்படு யின் அர்த்தம்

சங்கடப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (சில சூழ்நிலைகளில்) தயக்கமாகவும் சிரமமாகவும் உணர்தல்.

  ‘அவனுக்கு வந்திருப்பது புற்றுநோய்தான் என்பதைத் தெரிவிக்க அவன் தந்தை சங்கடப்பட்டார்’
  ‘‘சங்கடப்படாமல் உங்கள் கழிப்பறைகளையும் சுத்தம் செய்துவிடுங்கள்’ என்று விடுதிக் காப்பாளர் வலியுறுத்திச் சொன்னார்’

 • 2

  சிரமப்படுதல்.

  ‘மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டு இப்போது பணத்திற்குச் சங்கடப்படுகிறார்’