தமிழ் சங்கடப்படுத்து யின் அர்த்தம்

சங்கடப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒருவருடைய) மனத்தைப் பாதிக்கும் விதத்தில் நடந்துகொள்ளுதல்.

    ‘நிலைமை புரியாமல் பெரியவரைச் சங்கடப்படுத்திவிட்டேனோ என்று வருத்தமாக இருக்கிறது’
    ‘அமைச்சரைச் சங்கடப்படுத்துவதுபோல் எந்தக் கேள்வி யும் கேட்டுவிடாதீர்கள் என்று நிருபர் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்’