தமிழ் சங்கடம் யின் அர்த்தம்

சங்கடம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (ஒரு நிகழ்ச்சியால் மனத்தில் ஏற்படும்) நெருடல் உணர்வு; (மனத்தைப் பாதிக்கும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்வதில் ஏற்படும்) தயக்கம்; கஷ்டம்.

  ‘தாத்தா பிரியமற்றவராக மாறிவிட்டது மிகவும் சங்கடத்தைத் தந்தது’
  ‘நண்பர் கடன் கேட்டபோது இல்லை என்று சொல்வதற்குச் சங்கடமாக இருந்தது’
  ‘ஆண் மருத்துவரிடம் தன் நோயைப் பற்றிக் கூற அவள் பட்ட சங்கடம்!’

 • 2

  தொல்லை; அசௌகரியம்.

  ‘வீட்டுக்கு மூத்த பிள்ளையாக இருப்பதன் சங்கடமும் அசௌகரியமும் உனக்குத் தெரியாது’
  ‘அவனுக்கு உதவ நினைத்து நான் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன்’
  ‘இவ்வளவு சிறிய அறையில் ஐந்து பேர் தங்கியிருப்பது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது’