பெயர்ச்சொல்
- 1
(ஒன்று அல்லது ஒருவர் சம்பந்தப்பட்ட) விவகாரம்; சம்பவம்.
‘காலையிலிருந்து அடுத்த வீட்டுச் சங்கதிகளைப் பற்றியே நீ பேசிக்கொண்டிருக்கிறாய்’‘கோயில் சங்கதி என்றால் அவர் பணம் தந்துவிடுவார்’ - 2
(ஒன்று அல்லது ஒருவரைக் குறித்துப் பெறப்படும் அல்லது கருதும்) செய்தி அல்லது விவரம்; விஷயம்.
‘நாம் மிஞ்சினால் அவன் கெஞ்சுவான்; தெரியாத சங்கதியா இது?’‘அவர் ஊரில் இல்லை என்கிற சங்கதி நீ சொல்லித்தான் எனக்குத் தெரியும்’‘அவர் நிகழ்ச்சிக்கு வருவாரா மாட்டாரா என்பது வேறு சங்கதி’‘இது சாதாரண சங்கதி இல்லை’
பெயர்ச்சொல்
இசைத்துறை- 1
இசைத்துறை
இசைத் தன்மையை வெளிப்படுத்தப் பாட்டின் ஒரு வரியைப் பலவிதமாகப் பாடிக்காட்டுவது.