தமிழ் சங்கு யின் அர்த்தம்

சங்கு

பெயர்ச்சொல்

 • 1

  குவிந்த முனையையும் உட்புறமாக வளைவுகளையும் உடைய ஓட்டினைக் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த, கடல்வாழ் உயிரினம்/(ஊதுதல், அலங்காரப் பொருள்கள் செய்தல் போன்றவற்றுக்குப் பயன்படும்) மேற்குறிப்பிட்ட உயிரினத்தின் ஓடு.

  ‘கோயிலில் சங்கு ஊதினார்கள்’
  ‘ஒரு கையில் சங்கும் மற்றொரு கையில் சக்கரமும் இருக்கும் திருமால் விக்கிரகம்’

 • 2

  பாலடை.

 • 3

  (தொழிற்சாலை முதலியவற்றில் நேரத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுத்தும்) நீண்ட உரத்த ஒலியை எழுப்பும் மின் சாதனம்.

  ‘ஆலையின் சங்கு ஏழு மணிக்குத் துல்லியமாக ஒலித்தது’

 • 4

  வட்டார வழக்கு கழுத்து.

  ‘அவனுடைய சங்கை நெறித்துக் கொலை செய்திருக்கிறார்கள்’