தமிழ் சஞ்சரி யின் அர்த்தம்

சஞ்சரி

வினைச்சொல்சஞ்சரிக்க, சஞ்சரித்து

 • 1

  (சுதந்திரமாக) திரிதல்; சுற்றிவருதல்.

  ‘புலி சஞ்சரிக்கும் காடு’
  உரு வழக்கு ‘மனம் கனவுகளில் சஞ்சரித்தது’

 • 2

  (குறிப்பிடும் இடத்தில்) இயங்குதல்; இருத்தல்.

  ‘அவனுடைய தோரணையைப் பார்த்தால் அவன் பூமியில் சஞ்சரிப்பதாகத் தெரியவில்லை’

 • 3

  சோதிடம்
  (குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவருடைய ராசியில் ஒரு கிரகம்) செயல்படுதல்.

  ‘உங்களுடைய ராசியில் சனி சஞ்சரிப்பதால் வரவுக்கு மேற்பட்ட செலவுகள் ஏற்படும்’