தமிழ் சஞ்சாரி யின் அர்த்தம்

சஞ்சாரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு ஒரு இடத்தில் நிலைத்து இருக்காமல் திரிபவர்.

  ‘கனவுலகச் சஞ்சாரியான அவருக்கு நடப்பு எங்கே புரியப்போகிறது?’
  ‘சித்தர்களை வானத்து சஞ்சாரிகள் என்று அழைப்பார்கள்’

தமிழ் சஞ்சாரி யின் அர்த்தம்

சஞ்சாரி

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  ஒரு ராகத்தின் தன்மையை விளக்கக்கூடிய ஸ்வர வரிசைகளைத் தாளத்தில் அமைத்துப் பாடும் இசை வடிவம்.