தமிழ் சடங்கு யின் அர்த்தம்

சடங்கு

பெயர்ச்சொல்

 • 1

  சாஸ்திரம் விதிப்பதால் அல்லது வழக்கம் காரணமாக (பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில்) பின்பற்றப்படும் மதம் சார்ந்த செயல்.

  ‘திருமணத்தின்போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஒரு சடங்கு’
  ‘தாத்தா இறந்த அன்று போக முடியாததால் பதினாறாம் நாள் சடங்கில் மட்டும் கலந்துகொண்டான்’

 • 2

  பெண் பருவம் அடைந்ததை முன்னிட்டு நடத்தப்படும் விழா.

  ‘என் தங்கை பெண்ணுக்கு நாளை சடங்கு’

 • 3

  (மாறுதலே இல்லாமல், எதற்காகச் செய்கிறோம் என்னும் சிந்தனையே இல்லாமல் ஒருவர்) இயந்திர கதியில் செய்யும் செயல்.

  ‘அலுவலகத்தில் நுழைந்ததும் மேஜையைத் துடைப்பது என்ற சடங்கை அவன் மறக்காமல் செய்வான்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு திருமணம்.

  ‘நாளை நண்பரின் மகளுக்குச் சடங்கு’
  ‘பையனின் சடங்குக்கு வாங்கிய கடனே இன்னும் கொடுத்து முடிக்கவில்லை’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு திருவிழா; உற்சவம்.